ஒரே ஆப்ரேஷனில் உக்ரைனை முடித்த புடின் | Russia vs Ukraine | kursk | putin kursk visit | gas pipeline
ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் களம் இறங்கி உள்ளன. அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது. ஆனால் சில விவகாரங்களில் ரஷ்யா முரண்டு பிடிக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இருக்க கூடாது. அதில் ரஷ்யாவின் எதிர்பார்ப்புகள் தான் தீர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அந்த நாடு விரும்புகிறது. இதற்கிடையே ரஷ்யாவிடம் பேச்சு நடத்த அமெரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இவ்வளவு பரபரப்புக்கு நடுவே ரஷ்யாவும், உக்ரைனும் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டுள்ளன. இதெல்லாம் குர்ஸ்க் kursk என்ற இடத்துக்காக நடக்கிற மிகப்பெரிய சண்டை. மிகப்பெரிய போர் நடக்கும் குர்ஸ்க் பகுதிக்கு முதல் முறையாக புடின் என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் ராணுவ உடையில் சிங்கம் போல் சென்றிருக்கிறார். அவரது குர்ஸ்க் வருகை அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைனை பதைபதைக்க வைத்துள்ளது. அப்படி குர்ஸ்கில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.