தோளில் கை போட்டு என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துட்டீங்களே? | Sakkarapani | Prakash
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொகுதியில் தற்போது எம்எல்ஏவாக இருப்பவர் திமுக மாவட்ட செயலர் பிரகாஷ். அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் மேயர் சத்யாவிற்கு சீட் வழங்கப்பட்டது. கடந்த 2016ல் தளி தொகுதியில் வென்ற பிரகாஷ், 2021 தேர்தலில் ஓசூர் தொகுதிக்கு மாற்றப்பட்டார். தற்போது வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட, திமுக தலைமை அழுத்தம் கொடுத்தது. ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் தொகுதி மாற முடியாது என பிரகாஷ் மறுத்ததால், சீட் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 31ம் தேதி தளி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமச்சந்திரன், ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் சத்யா, வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி தேர்தல் பிரசாரம் செய்தார்.