சட்டவிரோத வங்கதேசத்தினர் பற்றிய கருத்தால் மீண்டும் சர்ச்சை | Sam pitroda | Illegal bangladeshi migra
டில்லியில் பிப்ரவரி 5-ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விவகாரம் அரசியல் களத்தில் துருப்பு சீட்டாக மாறிவருகிறது. சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேச குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையை டில்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்காங்கே ரெய்டு நடத்தி வங்கதேசத்தவர்களை கைது செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் டில்லி தேர்தலில் வெற்றி பெற்றால் தலைநகரை சட்டவிரோத வங்கதேசத்தினர், ரோஹிங்கியா அகதிகளிடம் இருந்து விடுவிப்போம் என பாஜ வாக்குறுதி அளித்துள்ளது. வங்கதேசத்தினருக்கு ஆம் ஆத்மி ரேஷன், ஆதார் அட்டைகளை பெற்றுத்தந்ததாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான், சர்ச்சைக்கு பெயர்போன காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பசியாலும் வறுமையாலும் வாடும் புலம்பெயர்ந்தோரை வேட்டையாடுவதை விட புவி வெப்பமடைதல் போன்ற பிரச்னைகளில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் இங்கு வருவதற்கு நிறைய வேலை செய்கிறார்கள். சட்டவிரோத குடியேற்றம் தவறு என்றாலும், நாம் சட்டவிரோதமாக வந்த வங்கதேசத்தினறையும், சிறுபான்மையினரையும் குறிவைப்பதில் மட்டுமே தீவிரமாக இருக்கிறோம். எல்லோரையும் நாம் அரவணைத்துச் செல்ல வேண்டும். அதனால் நாம் சில சிரமங்களுக்கு உள்ளானாலும் அதில் பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை. நாம் நமது வளங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவது கிடையாது.