/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக அரசு செய்யும் துரோகம்: தலைவர்கள் கண்டனம் | Samsung workers | Protest | Arrest | High court
திமுக அரசு செய்யும் துரோகம்: தலைவர்கள் கண்டனம் | Samsung workers | Protest | Arrest | High court
காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் அமைப்பது உட்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9-ல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். போராட்ட திடல்களில் இருந்த பந்தலை அகற்றிய நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பின்னர் சொந்த பிணையில் போலீசார் உடனடியாக விடுவித்தனர்.
அக் 09, 2024