கட்சிக்கு எதிராக செயல்படும் சசி தரூர் ஒரு கபடதாரி: சந்தீப் தீக்ஷித் விமர்சனம் Sandeep Diskshit Slams
ேரள மாநிலம் திருவனந்தபுரம் லோக்சபா எம்பி சசி தரூர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய பாஜ அரசின் செயல்பாடுகளையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். பயங்கரவாதத்திற்கு எதிராக நம் படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் எம்பிக்கள் குழுவில் சசியும் இடம் பெற்றார். இந்நிலையில், டில்லியில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சசி, பிரதமரின் பேச்சை பாராட்டி கருத்து வெளியிட்டார். பிரதமரின் பேச்சு, பிரிட்டனின் மெக்காலே காலத்தைய 200 ஆண்டு அடிமை மனப்பான்மையை மரபை மாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இருந்தது. இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள், பண்பாட்டை மீட்டெடுக்க 10 ஆண்டு திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியதாக, சசி தரூர் கருத்து பதிவிட்டிருந்தார்.