வீட்டருகே போராடிய தூய்மை பணியாளர்கள் 200 பேர் கைது! | Sanitation workers Arrest | Sanitation workers
சென்னையில், ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் துாய்மை பணியை, தனியார் நிறுவனத்திடம் மாநகராட்சி ஒப்படைத்து உள்ளது. இதை கண்டித்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், துாய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை 13 நாட்கள் போராட்டம் நடத்தினர். கோர்ட் உத்தரவால், நள்ளிரவில் இவர்கள் கைது செய்து, குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். சென்ற 4ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில், திடீரென திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் மீண்டும் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். இந்த திடீர் போராட்டத்தை அடுத்து துாய்மைப் பணியாளர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த சூழலில் கொருக்குப் பேட்டை அம்பேத்கர் நகரில், துாய்மை பணியாளர்கள் 13 பேர் நேற்று பணி நிரந்தரம்கோரி தங்கள் வீட்டருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக 200க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் திரண்டனர்.