கோவை ஓட்டலில் மாஸ் காட்டும் பெண் யார்? | Mysterious woman | Kodanadu estate admin | Coimbatore
கோடநாடு நிர்வாகத்தை கவனிக்கும் மர்ம பெண்? எஸ்டேட் வட்டாரம் அதிர்ச்சி கோவையில இருக்க பிரபல 5 ஸ்டார் ஹோட்டல்ல ஒரு பெண் மாச கணக்குல தங்கி இருக்காங்களாம்... இவங்க ரூமுக்கு அடிக்கடி நிறைய பெட்டிகள் வருதாம். ஹோட்டல்ல வேல செய்ற ஊழியர்கள் பல பேருக்கு காஸ்ட்லியான மொபைல் போன் உட்பட பல பரிசு பொருள அந்த பெண் பரிசா குடுத்திருக்காங்க... இதனால, யாரும் பெட்டிகள சோதன போடுறதே இல்லயாம்.. அந்த பெண், தன்ன ஜெ., தோழியின் ஆள்னும், தான் இப்ப கோடநாடு எஸ்டேட் விவகாரங்கள கவனிக்கிறதாவும் பல பேர்கிட்ட சொல்லிருக்காங்க... ஆனா, எஸ்டேட் வட்டாரத்துல கேட்டா, அப்படி யாரும் இல்லன்னு கைய விரிக்கிறாங்க... ஓட்டல்ல தங்கி இருக்க அந்த லேடி கிட்ட நிறைய பணம் புழங்குது... இது சம்பந்தமா, வருமானவரி துறைக்கும் ரகசிய தகவல் போய், அவங்களும் விசாரணைய துவங்கியிருக்காங்களாம் தமிழக உளவுத்துறை போலீசாரும் அந்த பெண் யாரு, அவங்க பின்னணி என்னன்னு விசாரிச்சுட்டு இருக்காங்களாம்..