/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சவுக்கு நடத்தை மன்னிக்க முடியாததுதான்; ஆனா | Supreme Court | Savukku Sankar Case | TN Govt
சவுக்கு நடத்தை மன்னிக்க முடியாததுதான்; ஆனா | Supreme Court | Savukku Sankar Case | TN Govt
சவுக்கு மீது குண்டாஸ் சரியா TN அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை தமிழக போலீசார் கடந்த மே மாதம் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் குண்டர் தடுப்பு சட்டமும் அவர் மீது பாய்ந்தது. சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்ய கோரி அவரது தாயார் கமலா சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கமலா சுப்ரீம் கோர்ட்டை நாடினார். நீதிபதிகள் சுதன்சு துலியா, அசானுதீன் அமானுல்லா அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது.
ஜூலை 15, 2024