/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வறட்டு கவரவம் வேணாம்: மகேஷுக்கு அண்ணாமலை அட்வைஸ் | Anbil Mahesh Vs Annamalai | Dinamalar
வறட்டு கவரவம் வேணாம்: மகேஷுக்கு அண்ணாமலை அட்வைஸ் | Anbil Mahesh Vs Annamalai | Dinamalar
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதினார். BSNL நிறுவனத்திற்கு செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார்.
டிச 23, 2024
மேலும் கருத்துகள்