உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உண்மை சொன்ன ஐக்கிய ஜமாத் நிர்வாகி பதவி பறிப்பு | SDPI | ADMK | BJP

உண்மை சொன்ன ஐக்கிய ஜமாத் நிர்வாகி பதவி பறிப்பு | SDPI | ADMK | BJP

ஈரோடு, சத்தியமங்கலம் அரேபாளையத்தில் அதிமுக சார்பில் கடந்த வியாழனன்று மே தின பொதுக்கூட்டம், நடந்தது. அதில் அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாநில இணை செயலர் அப்துல் ஜப்பார் பாஜ கூட்டணி குறித்து பாராட்டி பேசினார். பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால், அ.தி.மு.க.,வுக்கு பலம் வரும். ஆள் பலம், அதிகார பலம் கிடைக்கும். இன்றைய தினம் அதிகார பலமே பேசுகிறது. அதனால், பாஜ.வுடன் அதிமுக கூட்டணி சேர வேண்டுமென கூறி வந்தேன். இப்போது கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி வலுவான சக்தியாக உருவெடுக்கும் என கூறினார். இவரது பேச்சு கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்துல் ஜப்பார் ஜாமத் பொறுப்பிலும் இருந்து வந்துள்ளார். ஜாமத்தில் இருந்து கொண்டு பாஜவுக்கு ஆதரவாக பேசுவதா என்கிற விமர்சனங்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஜமாத் ஆட்சி மன்ற குழுவின், அவசர கூட்டம் கோவையில் நடந்தது. தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். அதில் அப்துல் ஜப்பார் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது பேச்சுக்கு ஜமாத்துகளும், ஜமாத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டார். இதற்கிடையில் பாஜவுக்கு ஆதரவாக அப்துல் ஜப்பார் பேசியதுக்கு SDPI நிர்வாகி போனில் அழைத்து கண்டனம் தெரிவிக்கும் ஆடியோ வெளியாகி இருக்கிறது.

மே 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை