உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிப்பதில்லை! மாசெ.,க்கள் கவலை | TN BJP | Seat Sharing | BJP Meeting

எங்களிடம் எதுவும் கலந்து ஆலோசிப்பதில்லை! மாசெ.,க்கள் கவலை | TN BJP | Seat Sharing | BJP Meeting

பாஜ மாவட்ட தலைவர்கள் சிலர் கூறியதாவது: தமிழக பாஜவில் 67 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். தேசிய தலைமையோ, மாநில தலைமையோ என்ன முடிவெடுத்தாலும் அதை செயல்படுத்த போவது மாவட்டத தலைவர்கள் தான். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் கட்சியின் பலம், பலவீனம், யார் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பதெல்லாம் மாவட்ட தலைவர்களுக்கு தான் தெரியும். அதனால்தான் திமுக - அதிமுக போன்ற கட்சிகளே, மாவட்ட செயலர்களின் ஆலோசனைகளை பெற்று வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்தையும் செய்கின்றன. அவ்வப்போது மாவட்ட செயலர்கள் கூட்டத்தையும் நடத்துகின்றன. ஆனால் பாஜவில் மாவட்ட தலைவர்களிடம், மாநில தலைவரோ மற்ற நிர்வாகிகளோ எந்த கருத்தையும் கேட்கவில்லை. யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என கூட கேட்கவில்லை. நாங்கள் எதற்காக இந்த பொறுப்பில் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இதனால் மற்ற கட்சிகளும் எங்களை மதிப்பதே இல்லை.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !