ஈவெராவா? பிரபாகரனா? மோதி பார்ப்போம் வா! | Seeman | EVRamasami controversy
ஈவெரா பற்றி அவதூறு கிளப்பியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு இன்று முற்றுகையிடப்படும் என திக, திவிக, மே 17 இயக்கம் உள்ளிட்ட 30க்கும் அதிகமான ஈவெரா அமைப்புகள் அறிவித்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன் நேற்று இரவு முதலே உருட்டைக்கட்டையுடன் நாதக நிர்வாகிகளும் திரண்டதால் பரபரப்பு நிலவியது. 200க்கும் அதிகமான போலீசார் இன்று காலை குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்ப்பாட்டத்துக்கு திரண்ட அமைப்புகளை பாலவாக்கம் ஈசிஆர் சாலை அருகே பேரிக்கார்டுகளை வைத்து போலீசார் தடுத்தனர். அங்கு வந்த ஈவெரா அமைப்பினர், சீமானுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர். சீமான் போட்டோவை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர்.