உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொடக்கக்கல்வி ஆசிரியர் கைதுக்கு சீமான் கண்டனம்! Seeman | Teachers Protest | DMK | Stalin

தொடக்கக்கல்வி ஆசிரியர் கைதுக்கு சீமான் கண்டனம்! Seeman | Teachers Protest | DMK | Stalin

இதுதான் எந்த கொம்பனாலும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? சீமான் கொதிப்பு! சென்னையில் இன்று அமைதியான முறையில் போராட முயன்ற தொடக்க கல்வி ஆசிரியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் போராட முயன்ற ஆசிரியர்களை கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் கண்டனத்துக்குரியது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத் தானே ஆசிரியர்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும்;

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !