ஈவெராவின் சர்ச்சை பேச்சு பாஜ வெளியிட்ட ஆதாரம்! | Seeman | Ashvathaman | E.V.Ramasami
சமீபத்தில் இது தான் பெண்ணிய உரிமையா? என ஈவெராவை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசியது சர்ச்சையானது. திமுகவினரும், ஈவெரா ஆதரவாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சீமான் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே நேரம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சீமானுக்கு ஆதரவு தெரிவித்தார். ஈவெரா பேசி இருப்பதாக சீமான் கூறிய கருத்தை ஈவெரா எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன் என கூறி இருந்தார். இந்த சூழலில் ஈவெரா விஷயத்தில் சீமான் கூறியது உண்மைதான். ஆதாரங்கள் வெளியிடுவேன் என எங்கள் மாநில தலைவர் கூறினார். அவர் சார்பில் நான் ஆதாரங்களை வெளியிடுகிறேன் என கூறி தமிழக பாஜ மாநில செயலர் அஸ்வத்தாமன் வெளியிட்டு உள்ளார். ஈவெரா சிந்தனைகள் என்ற புத்தகத்தில் இருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ; மக்கள் சமூகத்தில் சொந்தம் பாராட்ட, சொத்துக்கள் அனுபவிக்க, கலவிக்கு உறவுமுறை என்ற நியதி உள்ளது. இவைகளை எல்லாம் பார்த்தால் உறவு முறைகள் அர்த்தமற்ற பழக்க வழக்கத்தில் கட்டுப்பட்டதாகவும், குருட்டு நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகவும் உள்ளன. இதன் அவசியங்களை அறிந்து கொண்டதாக கருத முடியவில்லை. சகோதர, சகோதரி உறவு முறையில் திருமணம் ஒவ்வொரு சமூகத்துக்கும், கலாச்சாரத்துக்கும் வேறுபடுவது, இனம், மதத்தால் திருமண முறைகளில் மாற்றம், வேறு நாடுகளில் உடன் பிறந்த சகோதரிகளையே மணப்பது, புராணங்களில் அரசன் இறந்து விட்டால் மகன் அரசனாவது, ராணி இறந்தால் மகள் ராணி ஆகி மனைவி ஆவது போன்ற சர்ச்சையான கருத்துக்களுடன் விளக்கமளிக்கும் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.