செங்கோலுக்கு எதிராக திமுக; கிழித்த பாஜ-என்ன நடந்தது? | Sengol Politics | NDA vs INDI Alliance
பார்லிமென்ட்டில் நிறுவிய செங்கோல் குறித்து சமாஜ்வாடி எம்பி ஆர்கே சவுத்ரி கேள்வி எழுப்பியது, இப்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. மக்களாட்சியின் அடையாளம் அரசியல் அமைப்பு சட்டம் தான். செங்கோல் அல்ல. செங்கோல் என்பது ராஜாவின் கையில் இருப்பது. ராஜ தண்டம் என்பார்கள். முடியாச்சி முடிந்து எப்போதோ மக்களாட்சி மலர்ந்து விட்டது. இப்போது பார்லிமென்ட்டில் செங்கோல் வைப்பது எப்படி நியாயம்? செங்கோலை எடுத்து விட்டு அதற்கு பதில் அரசியல் அமைப்பு சட்ட புத்தகத்தை வைக்க வேண்டும் என்று ஆர்கே சவுத்ரி வலியுறுத்தினார். சவுத்ரியின் கருத்து புயலை கிளப்பியது. சமாஜ்வாடிக்கும், திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளையும் பாஜ பந்தாடி வருகிறது. சவுத்ரியின் கருத்து அபத்தமானது. அவர் பார்லியின் புனிதத்தை குழிதோண்டி புதைத்து விட்டார். முதலில் அரசியல் சாசனம், பார்லிமென்ட் மரபுகளை சமாஜ்வாடி தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் பேச வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிஎல் வர்மா சாடினார். செங்கோல் நிறுவும் போதும் சமாஜ்வாடி எம்பிக்கள் இதே சபையில் தான் இருந்தனர். அப்போது அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? என்று அனு பிரியா பட்டேல் கேள்வி எழுப்பினார்.