உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செந்தில் விடுதலைக்கு பின்னால் உள்ள மர்மம் | Senthil balaji | Senthil balaji release

செந்தில் விடுதலைக்கு பின்னால் உள்ள மர்மம் | Senthil balaji | Senthil balaji release

கடைசி நேரத்தில் செந்திலுக்கு திக் திக்! விடுதலைக்கு முன் பதற வைத்த கோர்ட் பண மோசடி வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. கடந்த ஆண்டு ஜூன் 14ல் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட இவருக்கு 471 நாட்களுக்கு பிறகு ஜாமின் கிடைத்துள்ளது. இதையடுத்து செந்தில் பாலாஜி உடனே வெளியாவார் என்கிற குஷியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். புழல் சிறையில் இருக்கும் அவரை வெளியில் கொண்டு வர திமுக வக்கீல்கள் ஆயத்தமாகினர். ஜாமின் ஆவணங்களை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அப்போது முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி கார்த்திகேயன் திடீரென அதிர்ச்சி தந்தார். செந்தில் பாலாஜி ஜாமின் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவில் சில குழப்பங்கள் உள்ளது. பிணை உத்தரவாதங்களை இங்கு தாக்கல் செய்ய வேண்டாம். அமலாக்கதுறை விசாரணை அதிகாரி முன் தாக்கல் செய்யுங்கள் என கூறினார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் திமுக வக்கீல்கள் தவித்தனர். கடைசி நேரத்தில் எப்படி விசாரணை அதிகாரியிடம் போக முடியும். வழக்கமாக கோர்ட்டில் தானே தாக்கல் செய்வோம் என திமுக வக்கீல்கள் கூறினர். நீதிபதி கார்த்திகேயன் இதனை ஏற்க மறுத்தார். அமலாக்கத்துறை வக்கீலையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த பிணையிலும் சந்தேகம் இருப்பதாக கூறினார்.

செப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ