எ.வ.வேலு டு செந்தில் பாலாஜி வரை: DVAC குறியில் சிக்கியது எப்படி? | Senthil Balaji | DVAC
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தார். அப்போது கரூரில் நடந்த சாலை பணிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2022 மார்ச்சில் கரூரில் சுமார் 7 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டுப் பணி நடந்தது. இதற்கானடெண்டர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான சங்கர் என்பவரது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், பணிகளை முழுமையாகச் செய்யாமலேயே, போலியான M-Book தயாரித்து, மார்ச் 25, 28 ஆகிய தேதிகளில் 3.23 கோடி பணத்தை அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு விடுவித்துள்ளனர். M-Book என்பது பணிகளைப் பதிவு செய்யும் புத்தகமாகும். அதனையே போலியாக உருவாக்கினர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து, கரூரில் நபார்டு நிதியுதவியுடன் கூடிய இரு சாலைத் திட்டங்களிலும் 1.5 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புதுறை FIRல குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, கரூரில் 2021 முதல் 2022 வரை மொத்தம் 163 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ஒதுக்கப்பட்டது. இதில் சுமார் 68 சதவிகிதம் அதாவது 110 கோடி மதிப்பிலான டெண்டர்கள் சங்கர் ஆனந்த் நிறுவனத்திற்கு மட்டுமே ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தது. #KarurRaid #DVAC #EVVelu #SenthilBalaji #ShankarAnand #TamilNaduNews #TNPolitics