செந்தில் நண்பர் வீட்டில் சிக்கியது என்ன? பரபரப்பு தகவல் | Senthil Balaji issue | IT raid
கரூரை உலுக்கிய மெகா ரெய்டு செந்தில் நண்பர் வீட்டில் பரபரப்பு முக்கிய ஆவணங்களை அள்ளிய ஐடி ஆபீசர்ஸ்! டைட்டில்: செந்தில் நண்பர் வீட்டில் சிக்கியது என்ன? பரபரப்பு தகவல் | Senthil Balaji issue | IT raid | TN Election 2026 கரூரில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறையின் அதிரடி ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியத்தின் வீடு, அவரது கொங்கு மெஸ் உணவகத்தில் நேற்று முன்தினம் வருமான வரி ரெய்டு துவங்கியது. அதே போல், கரூர்-ஈரோடு சாலை காயத்ரி நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரின் சக்தி மெஸ் உணவகம், அவரது வீடு, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் இரண்டு அலுவலகங்கள் உட்பட ஏழு இடங்களிலும் நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்தின், பழைய அலுவலகத்தில் அன்று மாலையே சோதனை நிறைவு பெற்றது. மற்ற ஆறு இடங்களில் நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு சோதனையை முடித்து கொண்டு, வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். செந்தில் பாலாஜி நண்பர் சுப்பிரமணியம் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையும் முடிவுக்கு வந்து விட்டது. இந்த சோதனைகளில் பணம் சிக்கியதாக இதுவரை தகவல் இல்லை. ஆனால் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதை ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க இருக்கின்றனர்.