உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழக அரசை குறை சொன்ன அமலாக்கத்துறை | Senthil balaji | bail case | ED

தமிழக அரசை குறை சொன்ன அமலாக்கத்துறை | Senthil balaji | bail case | ED

செந்தில் தப்பி ஓடிவிட மாட்டார் ஜாமின் வழக்கில் காரசார வாதம்! தீர்ப்பு எப்போது? முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக 64 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். சிறப்பு கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த மோசடியில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து கடந்தாண்டு ஜூனில் செந்தில்பாலாஜியை கைது செய்தது. கீழ் நீதிமன்றங்களில் அவருக்கு ஜாமின் கிடைக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் அபய் ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று விசாரித்தது. அமலாக்கத்துறை வக்கீல்களிடம் நீதிபதிகள் சில கேள்விகள் கேட்டனர். ஒவ்வொரு முறையும் புதிய குறிப்பு தந்து விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். இன்னும் எத்தனை குறிப்புகள்தான் உள்ளன. இந்த வழக்கு விசாரணை எப்போதுதான் முடியும் என்று கேட்டனர். பதில் அளித்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணையை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது. வழக்கை ஒத்தி வைக்க 13 முறை செந்தில் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. விசாரணை தாமதம் ஆவது பற்றி தனியாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம் என்றது. செந்தில்பாலாஜி வக்கீல் வாதிடும்போது, வழக்குக்கு சம்பந்தம் இல்லாத வாதங்களை அமலாக்கத்துறை முன்வைப்பதாக சொன்னார்.

ஆக 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ