பதுங்கு குழிக்கு மாற்றப்பட்ட ஈரான் முக்கிய தலைவர் | Seyyed Ali Hosseini Khameneh | Hezbollah
இஸ்ரேல் மரணஅடி.. அடுத்த குறி பெரிய தலைக்கு? உச்சகட்ட பதற்றத்தில் ஈரான்! லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான தாக்குதஇஸ்ரேல் தீவிரமாக்கியுள்ளது. இதன் உச்சகட்டமாக 32 ஆண்டுகளாக ஹிஸ்புல்லாவின் தலைவராக இருந்த ஹசன் நஸ்ரல்லா ராக்கெட் ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதோடு இஸ்ரேல் நின்றுவிடவில்லை. ஹிஸ்புல்லாவை நிலைகுலைய வைக்க தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்றும் தாக்குதல்களை தொடர்ந்தது. ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சில் துணைத் தலைவரான நாபில் காவோக் கொல்லப்பட்டார். முன்னதாக ஹசன் நஸ்ரல்லா மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஹிஸ்புல்லாவின் மற்றொரு முக்கிய தலைவரான அலி கராக்கியும் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா உறுதி செய்துள்ளது. லெபனானில் கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 1030 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லெபனானின் தென் பகுதிக்குள் நுழைந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இருந்து தப்பிக்க லெபனான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற துவங்கி விட்டனர். எங்கள் இலக்கை அடையும் வரை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியாக உள்ளார். இதையடுத்து, லெபனானின் தென்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.