/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஷாஹி ஜமா மசூதி கலவரதுக்கு காரணம் பாஜ: அகிலேஷ் | Shahi Jama Masjid case | UP Sambhal issue | Akhilesh
ஷாஹி ஜமா மசூதி கலவரதுக்கு காரணம் பாஜ: அகிலேஷ் | Shahi Jama Masjid case | UP Sambhal issue | Akhilesh
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பால் Sambhal என்ற இடத்தில் ஷாஹி ஜமா Shahi Jama என்ற மசூதி உள்ளது. இந்த இடத்தில் முதலில் ஹரி ஹர் என்ற இந்து கோயில் இருந்தது. 1529ம் ஆண்டு முகலாய மன்னர் அக்பர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டினார். கோயிலை மீட்க வேண்டும் என்று விஷ்ணு சங்கர் ஜெயின் என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சம்மந்தப்பட்ட மசூதியில் சர்வே நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில் 19ம் தேதி மசூதியில் சர்வே நடந்தது. இன்று காலை மீண்டும் சர்வே குழுவினர் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் கூடினர். போலீசுக்கும் அவர்களுக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளு கலவரமாக வெடித்தது.
நவ 24, 2024