உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முதல் முறை ஸ்கிரீனுக்கு வந்த ஹெஸ்புலா புதிய தலைவர்-பரபரப்பு தகவல் | Israel vs Hezbollah | War

முதல் முறை ஸ்கிரீனுக்கு வந்த ஹெஸ்புலா புதிய தலைவர்-பரபரப்பு தகவல் | Israel vs Hezbollah | War

இனி இஸ்ரேலியர்கள் ஓடுவார்கள் ஹெஸ்புலா புதிய தலை ENTRY அடுத்த சம்பவம் என்ன? இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புலா பயங்கரவாதிக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து விட்டது. இஸ்ரேல் நடத்திய 4 வார தாக்குதலில் லெபனானில் 1300 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு லெபனானில் இருந்து 15 லட்சம் பேர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க வடக்கு இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து நேற்று ஹெஸ்புலா பயங்கரவாதிகள் சரமாரியாக ஏவுகணை, ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இஸ்ரேலும் தெற்கு லெபனான், பெய்ரூட்டை குறி வைத்து குண்டு மழை பொழிந்தது. இந்த நிலையில் ஹெஸ்புலா அமைப்பின் தற்காலிக தலைவர் ஷேக் நயீம் காசெம் நேற்று டிவியில் தோன்றி பேசினார். அப்போது இஸ்ரேலுக்கு கடும் மிரட்டல் விடுத்தார். அவர் கூறியது: எங்கள் தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்டோர் கொல்லப்பட்டாலும் எங்கள் ராணுவ திறன் இன்னும் அப்படியே உள்ளது. எந்தெந்த பகுதிகளில் மூத்த தளபதிகளை இழந்தோமோ, அங்கெல்லாம் மாற்று தலைமையை தற்காலிகமாக நியமித்துள்ளோம்; விரைவில் நிரந்தர தளபதிகள் நியமிக்கப்படுவர். இஸ்ரேலில் ஆழமான ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறோம். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடந்தன. இதனால் இஸ்ரேலியர்களின் இடப்பெயர்வு அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !