உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய்லாந்தில் இளம்பெண் ஆட்சி! முடி சூடிய ஸ்டைலே தனி | Who is Paetongtarn Shinawatra | Thailand new PM

தாய்லாந்தில் இளம்பெண் ஆட்சி! முடி சூடிய ஸ்டைலே தனி | Who is Paetongtarn Shinawatra | Thailand new PM

தாய்லாந்தே இவர் கையில் பிரதமர் ஆன இளம் பெண் யார் இந்த பெடோங்டர்ன்? தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்தவர் ஸ்ரேத்தா தவிசின். அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதாக அந்த நாட்டின் அரசியலமைப்பு கோர்ட் அவரை பதவி நீக்கம் செய்தது. இதையடுத்து புதிய பிரதமராக 37 வயதான பெடோங்டர்ன் ஷினவத்ரா, ஆளும் கட்சி எம்பிக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்டு முறைப்படி பிரதமராக பெடோங்டர்ன் பதவி ஏற்றார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்தியா, தாய்லாந்து உறவு மிகவும் ஆழமானது. இந்த உறவை இன்னும் வலுப்படுத்த பெடோங்டர்னுடன் இணைந்து வேலை செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று மோடி கூறினார். இளம் பெண் பிரதமரான பெடோங்டர்ன் பெரிய அரசியல் பின்புலம் கொண்டவர். முன்னாள் பிரதமர் தக்சின் ஷினாவரத்தின் மகள் ஆவார். அதுமட்டும் அல்ல, தாய்லாந்து நாட்டின் 2வது பெண் பிரதமர் என்ற பெருமையையும் பெடோங்டர்ன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக பெடோங்டர்னின் அத்தை யிங்லக் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்திருந்தார். தந்தையும் சரி, அத்தையும் சரி பல சிக்கல்களை எதிர்கொண்டவர்கள். அதாவது, பெடோங்டர்னின் தந்தை தக்சின் ஷினாவரத் 2001 முதல் 2006 வரை பிரதமர் பதவியை வகித்தார்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை