உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செய்தி சுருக்கம் | 01 PM | 31-01-2025 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 01 PM | 31-01-2025 | Short News Round Up | Dinamalar

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. முன்னதாக பிரதமர் மோடி பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க வேண்டும் என அன்னை லட்சுமியை பிரார்த்திக்கிறேன். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு அன்னை லட்சுமி தேவியின் அருள் கிடைக்க வேண்டும். மகாலட்சுமி வெற்றியையும், விவேகத்தையும் தருபவர். பட்ஜெட் தாக்கலுக்கு முன் அன்னை லட்சுமியை வழிபட்டு விட்டு வருகிறேன். 3வது முறையாக சேவையாற்ற நாட்டு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். இந்த பட்ஜெட் மக்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன். பாஜவின் மூன்றாவது ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் இது. இந்த பட்ஜெட்டில் அனைவருக்குமான திட்டங்கள் இடம்பெற்றிருக்கும். 3வது முறை ஆட்சி காலத்தில் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏராளமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. பல வரலாற்று சிறப்பு மிக்க மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். செயல், மாற்றம் என்பது தான் எங்களின் தாரக மந்திரம். பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. 2047ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்ற பட்ஜெட் கூட்டம் வழிகாட்டும். நாளை தாக்கலாகும் மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சியை மேலும் உறுதி செய்யும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்பிக்களும் பங்களிப்பார்கள் என நம்புவதாக மோடி கூறி சென்றார். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. முதல் கட்டம் பிப்ரவரி 13ல் முடிகிறது. மார்ச் 10ல் துவங்கும் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் ஏப்ரல் 4 வரை நடக்க உள்ளது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி