/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ரகசிய தகவல்! 2 இடங்களில் போலீஸ் சல்லடை! | Smuggling | Thoothukudi | Beedi leaves seized
ரகசிய தகவல்! 2 இடங்களில் போலீஸ் சல்லடை! | Smuggling | Thoothukudi | Beedi leaves seized
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு சில பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. நேற்று இரவு கியூ பிரிவு இஸ்பெக்டர் விஜய் அனிதா தலைமையிலான போலீசார் இனிகோ நகர் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர் . அப்போது சிலர் சரக்கு வேனில் இருந்து சில மூட்டைகளை பைபர் படகில் ஏற்றி கொண்டு இருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். கட்டிங் செய்யப்பட்டு பண்டல்களாக கட்டப்பட்ட பீடி இலை மூட்டைகள் சிக்கியது. கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த ராபின்ஸ்டன் கைதானார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு மற்றும் டெம்போ வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜன 24, 2025