அவதூறு வழக்கில் அப்பாவு சொன்னது என்ன? | Speaker Appavu | DMK | ADMK
கடிதம் வீட்டுக்கு வரவே இல்லையே அவதூறு வழக்கில் அப்பாவு ட்விஸ்ட் ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்தனர் என சபாநாயகர் அப்பாவு பேசி இருந்தார். இது அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அதிமுக வக்கீல் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். சென்னை ஸ்பெஷல் கோர்ட்டில் நீதிபதி ஜெயவேல் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பாவு நேரில் ஆஜராகி விளக்கம் தந்தார். வழக்கு விசாரணை செப்டம்பர் 26க்கு ஒத்திவைக்கப்பட்டது.
செப் 13, 2024