வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கே பல லட்சங்கள் லஞ்சம் பெறப்படும் நிலையில் ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம் என்பது கட்டாயமாக இருக்கும்.
ஆசிரியர்கள் நியமனத்திலும் அதிர்ச்சி: ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட தகவல் | Sridhar Vembu | Teacher Appoi
ஆசிரியர்கள் நியமனத்தில் நடக்கும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் ஐம்பது சதவீத மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளின் நிலை மோசமாக உள்ளதால், இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அரசு பள்ளிகள் மோசமாக இருப்பதால் ஏழை பெற்றோர் கூட கடன் வாங்கி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கே பல லட்சங்கள் லஞ்சம் பெறப்படும் நிலையில் ஆசிரியர் நியமனத்தில் லஞ்சம் என்பது கட்டாயமாக இருக்கும்.