உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ராகுல் கேள்விக்கு ஸ்டாலின் சுவாரஸ்ய பதில் Stalin | Rahul | Cycling | America | Chennai |

ராகுல் கேள்விக்கு ஸ்டாலின் சுவாரஸ்ய பதில் Stalin | Rahul | Cycling | America | Chennai |

பிரதர் நாம எப்போ சைக்ளிங் போகலாம்? தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் சிகாகோ நகரின் கடற்கரை சாலையில் நேற்று மாலை சைக்கிளிங் சென்றார். மாலை நேர அமைதி, புதிய கனவுகளுக்கு வித்திடும் என குறிப்பிட்டு அது குறித்த வீடியோவை ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அவரது வீடியோவை திமுக எம்.பி. வில்சன் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் கண்ணிலும் இந்த வீடியோ பட்டது. அதை பார்த்து ரசித்த ராகுல், சகோதரரே, நாம் இருவரும் சென்னையில் எப்போது சைக்கிளிங் போக போகிறோம் ? என கேட்டார். இதற்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அன்புள்ள சகோதரரே உங்களுக்கு எப்போது ஓய்வு இருக்குமோ அப்போது நாம் இருவரும் சேர்ந்து சைக்கிளில் சென்று சென்னையை சுற்றி பார்ப்போம்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ