இணைய சேவை லைசென்ஸ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
#Starlink #elanmusk #Rahul #Sindhya #SatelliteInternetService #Modi #BJP அமெரிக்காவை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் எலான் மஸ்க், தன் ஸ்டார்லிங்க் நிறுவனம் மூலம், இந்தியாவில் செயற்கைகோள் வழி இணைய சேவை வழங்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான லைசென்ஸ் பெற்ற பிறகும் பாதுகாப்பு அம்சம் என்ற பெயரில் தங்கள் நிறுவனத்தை செயல்பட விடாமல் தடுப்பதாக மத்திய அரசு மீது, எலான் மஸ்க் குற்றம்சாட்டினார். இந்திய அரசு யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பினார். அவர் எக்ஸ் பக்கத்தில் இட்ட பதிவுக்கு, வெல்கம் மஸ்க், இந்தியாவில் இன்னும் என்னெவல்லாம் நடக்கிறது என்பதை அறிவீர்கள் என பதிவிட்டிருந்தார். இந்திய தாெழில் அதிபர்கள் அம்பானி, அதானியை விமர்சிக்கும் வகையில் இருவரது செய்தி பகிர்வு இடம் பெற்றதாக பரவலாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், டில்லியில் இன்று நடந்த மொபைல் காங்கிரஸ் 2026 நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசினார். அப்போது, ராகுல் - மஸ்கின் குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், தகுந்த விளக்கம் அளித்தார். தற்போதெல்லாம் காங்கிரஸ் எந்தப் பக்கம் செல்கிறது என்பது அந்தக் கட்சிக்கே தெரியவில்லை. சாட்டிலைட் இணைய சேவை லைசென்ஸ் விவகாரத்தில் குழப்பமான வகையில் உள்ள அதன் நிலைப்பாடு. முதலில் இந்த லைசென்ஸ் வெறும் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்கவில்லை. ஸ்டார்லிங்க் உட்பட மூன்று நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் ஏகாதிபத்தியத்தை இந்தியா அனுமதிக்காது. லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டால், அதன் பின் சேவைகளை தொடங்க முடியும். இது ஸ்டார்லிங்க் நிறுவுனம் மட்டுமின்றி, லைசென்ஸ் பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. இது வழக்கமான நடைமுறையே. எந்த வகையிலும், நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என, அமைச்சர் பேசினார்.