உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர் சர்ச்சை விஷயத்தில் ஸ்டாலினை கிழித்த அண்ணாமலை | Annamalai | BJP | State president | Governor

கவர்னர் சர்ச்சை விஷயத்தில் ஸ்டாலினை கிழித்த அண்ணாமலை | Annamalai | BJP | State president | Governor

2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று கூடியது. இதில் உரையாற்ற வந்த கவர்னர் ரவி தமிழ்த் தாய் வாழ்த்துக்குப் பின் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் சட்டசபை பாரம்பரியத்தின் அடிப்படையில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். ஆண்டின் முதல் கூட்டத் தொடரிலேயே கவர்னர் சபையை புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கவர்னர் ரவி சட்டசபையை தொடர்ந்து அவமதிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி சபாநாயகர், அமைச்சர்கள் என திமுகவினர் அடுத்தடுத்து விமர்சனம் செய்கின்றனர். ஆனால் மக்களின் கோபத்தை திசை திருப்ப கவர்னர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகி விட்டதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கவர்னர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் திமுக அரசு அதனை மறுத்திருக்கிறது. 1991 வரை, தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. 1991 ஜூலையில் செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோதுதான், முதல்முறையாக கவர்னர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், கவர்னர் வருகையின் போதும், நிகழ்ச்சியில் இருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும். இந்த உத்தரவு, 1971ம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை