உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மூக்கு உடைந்த மம்தா! பரபரக்கும் மே.வங்கம் Kolkata Strongroom Row | TMC vs BJP | EVM Tampering CCTV

மூக்கு உடைந்த மம்தா! பரபரக்கும் மே.வங்கம் Kolkata Strongroom Row | TMC vs BJP | EVM Tampering CCTV

மம்தாவின் திரிணமுல் கட்சி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் 294 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29-களில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை. அனைத்து ஓட்டு மெஷின்களும் சீலிடப்பட்ட அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடக்கு கொல்கத்தாவில் உள்ள தொகுதிகளுக்கான ஓட்டு மெஷின்கள் வைக்கப்பட்டு இருக்கும் குதிராம் அனுஷிலன் கேந்திரா என்ற மையத்தில் பாஜவினர் புகுந்ததாக மம்தா கட்சியினர் அதிர்ச்சி கிளப்பினர். ஸ்ட்ராங் ரூமில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிலர் நடமாடுவதாக சோசியல் மீடியாவில் திரிணமுல் காங்கிரஸ் அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டது. திரிணமுல் வேட்பாளர்கள் சசி பாஞ்சா, குணால் கோஷ் அந்த மையத்தில் தர்ணா செய்தனர். ‛ஓட்டுமெஷின்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்த அன்று மாலை 4 மணி அளவில் யாரும் இல்லாத போது ஸட்ராங் ரூம் திறக்கப்பட்டுள்ளது என்றனர். முதல்வர் மம்தாவும் அங்கு விரைவதாக தகவல் வந்ததால், திரிணமுல் தொண்டர்கள் குவிந்தனர். #KolkataStrongroomRow #TMCvsBJP #EVMTampering #CCTV #ElectionIntegrity #WestBengalPolitics #ElectronicVotingMachines #PoliticalShowdown #KolkataElections #VoteFraud #EVMWatch #DemocracyInAction #ElectionControversy #IndiaElection2026 #PoliticalUnrest #TransparencyInElections #CivicResponsibility #BengalPolls #TMC #BJP

மே 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை