உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஊழல் வழக்கை ரத்துசெய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு | Supreme Court | DK Sivakumar Deputy CM | Karnataka

ஊழல் வழக்கை ரத்துசெய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு | Supreme Court | DK Sivakumar Deputy CM | Karnataka

சொத்து குவிப்பு வழக்கில் சிவக்குமார் மனு தள்ளுபடி! கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை-முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் உள்ளார். 2017-ல் பாஜ ஆட்சி நடந்தபோது சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்தது. அதில், கணக்கில் வராத சுமார் 74 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகுமார் மீது வருமான வரி துறை வழக்குப்பதிந்தது. 2020ல் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசு அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சிவக்குமார் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சிபிஐ விசாரணையை எதிர்த்து சிவக்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். நீதிபதிகள் பேலா திரிவேதி, சதிஷ் சந்திர சர்மா அமர்வு விசாரித்தது. சிவக்குமார் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகித்தி ஆஜரானார். சிவக்குமார் மீது வருமான வரி துறை விசாரணை நடத்துவதால், சிபிஐ வழக்கை ரத்து செய்ய வேண்டும். சிபிஐ வழக்கு சட்ட விரோதம் என வாதிட்டார். நீதிபதி பேலா திரிவேதி அதை ஏற்க மறுத்தார். வருமான வரி துறை நடத்தும் விசாரணை வேறு. சிபிஐ விசாரணை வேறு.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை