உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டிருந்தால் தான் மறு தேர்வு! Supreme court | Observation

ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டிருந்தால் தான் மறு தேர்வு! Supreme court | Observation

நாடு முழுவதும் மே மாதம் நீட் தேர்வு நடந்தது. சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. நாடு முழுவதும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. முக்கியமான வழக்குகளை எல்லாம் ஒன்றாக்கி விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக்கொண்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு கடந்த 8ம் தேதியில் இருந்து விசாரணையை நடத்தி வருகிறது. இன்று நடந்த விசாரணையின் போது நீட் தேர்வை மறுபடியும் நடத்த உத்தரவிட மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாடு முழுவதும் 23 லட்சத்துக்கு அதிகமான தேர்வர்கள் நீட் தேர்வை எழுதி உள்ளனர். எனவே அனைவருக்கும் நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் தகுதி பெற்ற சுமார் 1 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு மட்டும் மறு தேர்வு எழுத உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கேள்வித் தாள்கள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும், மாணவர்களும் பாதிக்கப்பட்டதாக கோர்ட் கருதினால் மட்டுமே மறு தேர்வுக்கு உத்தரவிட முடியும் என தலைமை நீதிபதி சந்திரசூட் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார். நீட் தேர்வில் ஒட்டுமொத்தமாக முறைகேடுகள் நடக்கவில்லை என்று சென்னை ஐ.ஐ.டி கூறியது. அதனுடைய அறிக்கையை கோர்ட் ஏற்க கூடாது என மனுதாரர்கள் வலியுறுத்தினர். தேசிய தேர்வு முகமை ஆட்சி மன்ற குழுவில் சென்னை ஐ.ஐ.டி உறுப்பினராக உள்ளது. அது தரும் ஆய்வறிக்கை நம்பத் தகுந்தவை அல்ல. சென்னை ஐ.ஐ.டி.யின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் கோரினர். மத்திய அரசின் எதிர்ப்பால் கோர்ட் அதை ஏற்கவில்லை.

ஜூலை 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை