இப்போ தெரிகிறதா? நீங்கள் நிதி துறையில் இருக்கும் போது இப்படி தான்!
இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கீழ் பென்னாத்தூர் பகுதியில் ஐ.டி பூங்கா அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் தியாகராஜன் பதில் அளித்தார். இந்த நிதியாண்டு 119 கோடி ரூபாய் தான் தகவல் தொழில் நுட்ப துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, அதனால் ஓர் அளவுக்கு தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். நிதி குறைவாக இருந்தும் சிறப்பாக செயலாற்றி வருகிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், இப்போது தெரிகிறதா? நீங்கள் நிதி துறையில் இருக்கும் போது இப்படி தான் நிதி ஒதுக்கினீர்கள் என்றார்.
ஜூன் 29, 2024