உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இடைத்தேர்தல் களம் விறுவிறுப்பு அடுத்தடுத்து வேட்பாளர்கள் அறிவிப்பு

இடைத்தேர்தல் களம் விறுவிறுப்பு அடுத்தடுத்து வேட்பாளர்கள் அறிவிப்பு

முதல்வர் விஜய் வென்ற திருச்சி கிழக்கு உட்பட தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் மதுராந்தகம், தாராபுரத்திற்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு காரணமாக எஞ்சிய 5 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 2 தொகுதிகளில் அக்டோபர் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. திமுக, தவெகவை தொடர்ந்து அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகத்தில் கணிதா சம்பத் தாராபுரத்தில் பானுமதியை வேட்பாளர்களாக இறக்கி உள்ளது அதிமுக. கடந்த சட்டபை தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் இரண்டிலும் அதிமுக வெற்றி பெற்று இருந்தது. ஆனால், எம்எல்ஏக்கள் மரகதம் குமாரவேல், சத்யபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்தனர். இதனால், மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. ராஜினாமா செய்த 2 எம்எல்ஏக்களும், தவெக வேட்பாளர்களாக மீண்டும் அதே தொகுதிகளில் நிறுத்தப்பட்டு உள்ளனர். 2 தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவுகிறது. மதுராந்தகம் தொகுதியில் தவெகவின் மரகத குமரவேல்; திமுகவின் பரந்தாமன்; அதிமுகவின் கணிதா சம்பத் மோதுகின்றனர். தாராபுரத்தில் தவெகவின் சத்தியபாமா; திமுகவின் சுகன்யா; அதிமுகவின் பானுமதி போட்டியிடுகின்றனர். இது தவிர, நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Tamilnadu #ByeElection #Madurantakam #Dharapuram #ADMK #DMK #TVK #CandidatesAnnounced #TNPOLITICS #TNCMVijay #Election2023 #PoliticalUpdates #TamilNaduPolitics #VoteForChange #CivicEngagement #StateElection #GrassrootsPolitics #DemocracyInAction #PoliticalCandidates #LocalElections

செப் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !