நிரந்தரம் செய்யாவிட்டால்... ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் வார்னிங் | Teachers protest for permanent job
தமிழக அரசு பள்ளிகளில் ஓவியம், இசை, உடற்கல்வி மற்றும் கணினி பாடங்களை நடத்த 14 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 2012ல் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது அவர்களது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பகுதிநேர ஆசிரியர்களுக்கு 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு வாழ முடியாது என்பதால் பலர் வேலையை விட்டு சென்று விட்டனர். 2021 சட்டசபை தேர்தலின்போது பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தம் செய்வதாக, ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் 181வது வாக்குறுதியாகவும் அது இடம்பெற்றிருந்தது. ஆனால் ஸ்டாலின் முதல்வராகி 4 ஆண்டை கடந்த பின்பும் கோரிக்கையை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தி அடைந்த பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் இன்று சிறைநிரப்பும் போராட்டத்தை அறிவித்தனர்.