உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டெட் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க பாஜ கோரிக்கை | Teachers Protest|DMK Election Promise 17

டெட் முடித்த 40 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க பாஜ கோரிக்கை | Teachers Protest|DMK Election Promise 17

தமிழக பாரதிய ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பாதவது கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) தேர்ச்சி பெற்ற சுமார் 40 ஆயிரம் இளைஞர்களுக்கு, இன்று வரை பணி வழங்கப்படவில்லை. பல முறை அவர்கள் கோரிக்கை வைத்தும், அறவழிப் போராட்டங்கள் நடத்தியும், திமுக அரசு கண்டுகொள்ளவில்லை. 2021 தேர்தல் அறிக்கையில், வாக்குறுதி எண் 177 ல், இவர்களுக்கு பணி வழங்குவோம் என்று பொய் கூறி ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் துரோகம் செய்து வருகிறது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ