உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக கவுன்சிலரின் கணவருக்கு நேர்ந்த கதி Tenkasi | DMK | Fight

திமுக கவுன்சிலரின் கணவருக்கு நேர்ந்த கதி Tenkasi | DMK | Fight

மேலகரம் பேரூர் கழக திமுக செயலாளராக உள்ள சுடலை என்பவர் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதாக சண்முகசுந்தரம் பேரூராட்சி கூட்டத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தார். இது தொடர்பாக சுடலைக்கும் சண்முகசுந்தரத்திற்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இன்று மதியம் மேலகரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள சமுதாய நலக்கூடம் பகுதியில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுடலை தனது வாகனத்தில் இருந்த கத்தியை எடுத்து சண்முக சுந்தரத்தை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயமடைந்த சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு தென்காசி அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆக 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை