உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தாய்லாந்து டூரில் ரூ.25 கோடி கஞ்சா கடத்திய குடும்பம்-பரபரப்பு | Thailand to chennai smuggling

தாய்லாந்து டூரில் ரூ.25 கோடி கஞ்சா கடத்திய குடும்பம்-பரபரப்பு | Thailand to chennai smuggling

சென்னை ஏர்போர்ட்டில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை சோதனை செய்தபோது, பெண் உட்பட 3 பேர் மீது சந்தேகம் வந்தது. மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனை செய்த போது உள்ளே கலர் கலராக 24 பாக்கெட்டுகள் இருந்தன. எல்லாம் உலர் பழ வகைகள். தாய்லாந்தில் உயர் ரகம் கிடைக்கும் என்பதால், 24 கிலோவுக்கு வாங்கி வருகிறோம் என்று குடும்பத்தினர் கூறினர். இருப்பினும், சந்தேகத்தில் ஒரு பாக்கெட்டை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர். உள்ளே பதப்படுத்தப்பட்ட உயர் ரக கஞ்சா இருந்தது. எல்லா பாக்கெட்டையும் உடைத்து பார்த்த போது, மொத்தம் 23.5 கிலோ உயர் ரக கஞ்சா சிக்கியது. மூன்று பேரும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில், குடும்பமே கடத்தல் குருவிகள் என்பதும், சுற்றுலா செல்வது போல் பெரிய கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருப்பதையும் சுங்க அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர், கடத்தல் குருவிகளை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 24 கோடியே 50 லட்சம் ரூபாய் என்று சுங்க அதிகாரிகள் கூறினர். சர்வதேச கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி