திருமாவளவன் - முருகன் சண்டையில் குளிர்காயும் சீமான் | CM issue | Thirumavalavan | L.Murugan | Seeman
முதல்வர் பதவி விவகாரத்தில் திருமாவளவன் - முருகன் மோதல் சீமான் போடும் தனி கணக்கு 2009ல் திமுக ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவில் அருந்ததியருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது. இதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் எதிர்த்தனர். சில கட்சிகள் சார்பில் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு அருந்ததியர் சமுதாயத்தினருக்கு வழங்கிய 3 சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என அங்கீகரித்து ஆகஸ்டில் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக விசிக சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை திமுக அரசு கொண்டு வந்ததால் அக்கட்சி கூட்டணியில் உள்ள திருமாவளவன் தற்போது தீவிரமாக எதிர்ப்பு காட்டவில்லை. இந்த சூழலில் அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னியரசு திருமாவளவனை தமிழக முதல்வராக்குவது எங்கள் கனவு என பேட்டி ஒன்றில் கூறினார்.