உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நயினார் நாகேந்திரனுக்கு சால்வை அணிவித்த திருமாவளவன்! Thirumavalavan | VCK | Nainar Nagendran | Murug

நயினார் நாகேந்திரனுக்கு சால்வை அணிவித்த திருமாவளவன்! Thirumavalavan | VCK | Nainar Nagendran | Murug

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கட்சி சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் திருச்சி ஏர்போர்ட் வந்தனர். அங்கு ஏற்கனவே விமான பயணத்துக்காக காத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நயினார் நாகேந்திரன் மற்றும் முருகனை சந்தித்துப் பேசினார். பாஜ மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு துண்டு அணிவித்து, வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், தன் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். பின், மத்திய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், திருமாவளவன் ஆகிய மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திருமாவளவன், சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். இது திமுக கூட்டணியில் சர்ச்சையாகி உள்ளது. பாஜ கூட்டணியில் திருமாவளவன் சேர வேண்டும் என்று, அண்மையில் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், ஏர்போர்ட்டில் திருமாவளவனும், நயினார் நாகேந்திரனும் சந்தித்து பேசியிருப்பது, திமுக கூட்டணியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மே 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ