உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருமாவளவனிடம் விசிக நிர்வாகிகள் குமுறல் | DMK | VCK | Thirumavalavan

திருமாவளவனிடம் விசிக நிர்வாகிகள் குமுறல் | DMK | VCK | Thirumavalavan

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். விஜய் அறிவிப்பை அப்போதே விசிக வரவேற்றது. இதனால் திமுக கூட்டணியில் விசிக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதன் தொடர்ச்சியாக விசிக துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனாவின் அம்பேத்கர் குறித்த நுால் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ல் நடக்க ஏற்பாடானது. இதில் திருமாவளவனுடன் நடிகர் விஜயும் பங்கேற்க இருப்பதாக தகவல் பரவியது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு கூட்டணியை கடுமையாக விமர்சிக்கும் நடிகர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு திருமாவளவன் எப்படி போகலாம் என திமுகவினர் விமர்சித்தனர். இந்த சர்ச்சைக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டார் திருமாவளவன்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி