உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? திருமாவளவன் ஓட்டம் | Thirumavalavan | MaduraiAirport

மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன? திருமாவளவன் ஓட்டம் | Thirumavalavan | MaduraiAirport

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆரியத்துக்கு கொடி பிடித்தவர்கள். கோயில்களில் இருந்து தமிழை விரட்டி அடித்தவர்கள். தங்கள் பெயரைக் கூட வட மொழியில் வைத்துக் கொண்டனர் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சில நாட்களுக்கு முன் பேசினார். இது, தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட பேச்சுகளெல்லாம் தேவையா? என, தி.மு.க., தலைமையில் இருந்து திருமாவளவனுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. கூடவே, இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தப் பிரச்னையை அப்படியே அமுக்கிப் போட முடிவெடுத்த திருமாவளவன், தொடர்ந்து அதுகுறித்து பேசுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை சென்ற அவரிடம் இது தொடர்பாக கேள்விகள் கேட்க, மதுரை விமான நிலைய வாயிலில் பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.

பிப் 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !