அரசு தரப்பை ஆடிப்போக வைத்த நீதிபதிகள் கேள்வி | Thiruparankundram | Madurai | Hindu Munnani
இந்து அமைப்பினர் போராட்டத்துக்கு போலீஸ் காட்டிய கெடுபிடிகளை தொடர்ந்து ஐகோர்ட் மதுரை கிளையில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 144 தடை உத்தரவை நீக்க வேண்டும்; போராட்டத்துக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு, 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது பிப்ரவரி 3ல் அண்ணாதுரை நினைவுநாள் ஊர்வலத்திற்கு எப்படி அனுமதியளிக்கப்பட்டது என கேள்வி எழுப்பியது. பின் பழங்காநத்தத்தில் மாலை 5 முதல் 6 மணிவரை அமைதியான முறையில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தலாம். எவ்வித ஆட்சேபகரமான கோஷங்களையும் எழுப்பக்கூடாது. அதை போலீசார் வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால் அதற்கு மனுதாரர்கள் பொறுப்பேற்க வேண்டும். மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர் பிப்ரவரி 19ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.