உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் | Tiruchirappalli | dmk | councillor | porkodi

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் காரசார வாதம் | Tiruchirappalli | dmk | councillor | porkodi

திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டம் கடந்த மாத இறுதியில் நடந்தது. அப்போது, 63 வது வார்டு கவுன்சிலர் பொற்கொடி, தனது வார்டில் எந்த ஒரு பணிகளும் நடக்கவில்லை என மேயர் அன்பழகனை குறை கூறினார். கூட்டத்திலேயே மேயருக்கு அல்வா கொடுத்து தன்னுடைய வார்டை வஞ்சித்து விட்டதாக சொல்லாமல் சொன்னார் பொற்கொடி. மேயருக்கு பொற்கொடி அல்வா கொடுத்த சம்பவம் திருச்சியில் பரபரப்பாக பேசப்பட்டது. மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடந்தபோது, அல்வா பிரச்னையை மேயர் அன்பழகன் கிளறினார். விளம்பரத்துக்காக மன்றத்தை கவுன்சிலர் பொற்கொடி அவமதித்து விட்டார். தனது செயலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்

செப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ