உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவை முந்திக்கொள்ள விஜய்க்கு அவசரம் tirumavazhavan| VCK| TVK actor vijay| illyathalapathy

அதிமுகவை முந்திக்கொள்ள விஜய்க்கு அவசரம் tirumavazhavan| VCK| TVK actor vijay| illyathalapathy

தவெக மாநாட்டில் நடிகர் விஜய் உரையாற்றியது எல்லாம் பழைய சரக்குகள்தான் என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்து உள்ளார். அவரது அறிக்கை; கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற புதிய நிலைப்பாட்டை தமிழக அரசியல் களத்தில் முதல் முறையாக விஜய் முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்க கூறி இருக்கிறார். ஆனால், இந்த யுத்த களத்தில் உரிய நேரத்தில், உரிய இலக்கில் அவர் வீசியதாக தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை. திமுக எதிர்ப்பும், திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவதுமே அவரது அதிதீவிர எண்ணமாக இருக்கிறது. அவரது பேச்சில் வெளிப்படும் அதிகார வேட்கையும், அடையாள அரசியலும் பழைய சரக்குகளே. குடும்ப அரசியல் எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவை பழைய முழக்கங்களே. ஆக்கப்பூர்வமான புதுமையான நிலைப்பாடுகளோ, செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிக்கர முன்மொழிவுகளோ எதுவும் இல்லை. பண்டிகை கால தள்ளுபடி விற்பனை போல ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற அரசியல் உத்தி வெளிப்பட்டு உள்ளது. அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்து விட்டார்களோ எனத் தோன்றுகிறது. ஆஃபர் என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், டிமான்ட் என்பது முன்கூட்டியே கோருவதாகவும், வெளிப்படையாகவும் இருக்கலாம்.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ