உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அப்பா பட்ஜெட் அமோகமுங்க கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள் | TN budget 2025 | Annamalai Bjp |Dmk

அப்பா பட்ஜெட் அமோகமுங்க கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள் | TN budget 2025 | Annamalai Bjp |Dmk

தமிழக பட்ஜெட் எப்படி? ஒற்றை படம் போட்டு கலாய்த்த அண்ணாமலை தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை மக்கள் பார்க்க வசதியாக, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் எல்இடி திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் கடற்கரைகள், அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பட்ஜெட் உரையை கேட்பதற்காக நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. ஆனால், பல இடங்களில் நாற்காலிகள் காலியாக கிடந்தன. அப்படி காற்று வாங்கும் ஒரு இடத்தின் படத்தை வெளியிட்டு, பட்ஜெட் பற்றிய கருத்தை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பல ஆயிரம் கோடி ஊழல் மட்டுமே செய்து, தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், விளம்பரத்துக்காக வெற்று அறிவிப்புகளை மட்டும் உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டும் திமுக வெளியிடும் பட்ஜெட்டும், இதுபோன்று காலியாக இருப்பதில் வியப்பில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். நாற்காலிகள் காலியாக கிடக்கும் சேர்களை பதிவிட்டு பலரும் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கிண்டலடிக்கின்றனர். ஈ காக்காவ கூட காணோம் அப்பா பட்ஜெட்டுக்கு அமோக வரவேற்பு கண்டுகொள்ளாத தமிழக மக்கள் 2 பேரு உட்கார்ந்து இருக்காங்க ஆனா அவங்களும் வெயிலுக்கு ஒதுங்கி உட்கார்ந்து இருக்காங்க என்பன போன்ற கமென்ட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்படுகின்றன.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை