உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தலைவர் பதவிக்கு மல்லுகட்டும் கார்த்தி எம்பி | TN Congress | MP Karti Chidambaram | evks elangovan

தலைவர் பதவிக்கு மல்லுகட்டும் கார்த்தி எம்பி | TN Congress | MP Karti Chidambaram | evks elangovan

இளங்கோவன் ஆதரவாளர்களை கொத்தாக இழுக்க கார்த்தி ப்ளான்! சென்னை ஓட்டலில் நடந்த தடபுடல் அசைவ விருந்து தமிழக காங்கிரசில் ஒவ்வொரு தலைவர்களுக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் கூட்டம் இருப்பதால் கோஷ்டிகள் அதிகம். ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு பின் அவரது ஆதரவாளர்கள் தங்களுக்கான தலைவரை தேர்வு செய்வதில் குழப்பத்தில் உள்ளனர். இளங்கோவனின் நண்பரான தமிழக காங்கிரஸ் தணைத்தலைவர் நாசே ராமச்சந்திரனை தலைவராக ஏற்க திட்டமிட்டுள்ளனர். இச்சூழலில், காங்கிரஸில் தலைவர் பதவிக்கு மல்லுகட்டும் எம்பி கார்த்தி, இளங்கோவன் ஆதரவாளர்களை தன் பக்கம் ஈர்க்க, திநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார். மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், இறால்தொக்கு என 14 வகை உணவுகளுடன் விருந்து நடந்தது. இளங்கோவன் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய கார்த்தி, உங்கள் அனைவரையும் என்னுடன் பயணிக்க அழைக்கிறேன். நாம் ஒன்றுசேர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவோம். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும். கடந்த முறை 25 சீட் கிடைத்தது. 18ல் வென்றோம். சீட் அதிகமாக வாங்க வேண்டுமானால் கட்சியை பலப்படுத்தவேண்டும். அதற்கு அனைவரும் ஒருமித்த கருத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

மார் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி