தமிழக காங்கிரசில் சர்ச்சையான அறிவிப்பு! | TN Congress | Selvaperunthagai
நன்கொடை என்ற பெயரில் ஏலம் விடுறீங்களா? காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கொந்தளிப்பு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். கடந்த செப்டம்பரில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் நிர்வாகிகளை மாற்றி புதியவர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில செயற்குழு உறுப்பினர்கள், துணை தலைவர்கள், பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஜன 06, 2025