கடும் நெருக்கடியில் திருமாவளவன்-முடிவு என்ன? | bihar election result | tn election 2026 | dmk vs vck
விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கியது முதல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அந்து கட்சி தலைவர் திருமாவளவன் முழக்கமிட்டு வருகிறார். எல்லா முறையும் கூட்டணி வைத்து வெற்றி பெற்றாலும், ஆட்சியில் அதிகாரம் என்பது விசிகவுக்கு கனவாகவே இருக்கிறது. இப்போது அந்த கட்சிக்கு 2 எம்பிக்கள், 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் எப்படியாவது திருமாவளவனை தங்கள் கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்று அதிமுக, தவெக முயற்சித்து வருகின்றன. இதனால் விசிகவுக்கு பெரிய டிமாண்ட் உள்ளது. ஆனால் திருமாவளவனோ, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் இப்போதும் இருக்கிறது. ஆனால், வரும் சட்டசபை தேர்தலில், அதை முன்வைக்க மாட்டோம் என்கிறார். இது அவரது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணியில் இப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்காவிட்டால், வேறு எப்போதும் பெற முடியாது என்று திருமாவளவனிடமே விசிகவினர் குமுறி வருகின்றனர். #Thirumavalavan #BiharElectionResult #TNElection2026 #DMKvsVCK #TamilNaduPolitics #ElectionResults #VCK #DMK #PoliticalWatch #BiharVotes #Election2026 #TamilNaduElections #CastePolitics #StateElections #LocalPolitics #DemocraticProcess #VotingRights #PoliticalAnalysis #ElectionDebate